அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி. பழனிச்சாமி தூத்துக்குடி வருகை இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2026 ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்லையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி. பழனிச்சாமி தமிழகம் முழுவதும் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை கொண்டு லட்சிய பயனத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.
அதன் 2 ம் கட்ட சுற்றுப்பயனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி அடுத்த மாதம் 1, 2 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அவரது வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து வர்த்தக அணி சாா்பில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கைலாஷ் திருமண மஹாலில் வரும் 19 ம் தேதி சனிக்கிழமை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் தலைமை கழக மாவட்ட சாா்பு அணிகள், ஒன்றிய, நகர பேரூர் கிளைக்கழகம், வட்டக்கழகம், தொழிற்சங்கம், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி வருகையையொட்டி 19 ம் தேதி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அறிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் தகவல்!!
அடுத்த
தூத்துக்குடியில் நாளை மறுநாள் ஜூலை 19ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது ஓம் சாந்தி பிரம்மா குமாரிகளின் பொன்விழா கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026