குழந்தைகள் நலனைக் காப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்போம் என்ற சமூக விழிப்புணர்வை வித்தியாசமான கலை நிகழ்ச்சி மூலம் முனைவர் சகா சங்கர், சகா கலைஞர்களுடன் இணைந்து ஏற்படுத்தினார்.



09.10.2026 அன்று நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குடும்ப நலனுக்கும் குழந்தைகளின் எதிர்காலத் துக்கும் மதுப்பழக்கம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



“தந்தையே, பிள்ளைகளை அடிக்காதீர்கள்; மது அருந்தாதீர்கள்!” என்ற கருத்தை வலியுறுத்திய கலைஞர்கள், குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் நிலவ வேண்டும் என்றும், குழந்தைகள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வளர பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவது, பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தவிர்ப்பது ஆகியவற்றின் அவசியத்தையும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துரைத்தனர்.



மது பழக்கத்தால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்; குடும்பத்தின் நலனில் அக்கறை செலுத்தி, குழந்தை களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



“குடியை ஒழிப்போம்; பிள்ளைகளைக் காப்போம்! குழந்தைகள் நலன் காப்போம்; பெண் கல்வியை வளர்ப்போம்!” என்ற சமூக அக்கறை நிறைந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முனைவர் சகா சங்கர் தலைமையில் சகா கலைஞர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தினர்.



“கலையும் கல்வியும் சகா” என்ற நோக்கத்தின் அடிப்படையில், கலைகளைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்தி, குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, மதுவிலக்கு மற்றும் குடும்ப நலன் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.