தூத்துக்குடி மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர் சந்திப்பில் போதை ஆசாமி ஒருவர் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்டபொம்மன் நகர் சந்திப்பில் போதையில் இருந்த நபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு போதை ஆசாமி அட்டூழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் அவரை கடுமையாக எச்சரிக்கவோ அல்லது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவோ இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாறாக, அவரை சமாளித்து அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு காவல்துறையினர் சென்றதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போதை ஆசாமியின் அட்டூழியம் நடைபெற்ற நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற நபர்களால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, கட்டபொம்மன் நகர் சந்திப்பு பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.