தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், தாயுமானவர் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திட்டங்களின் தற்போதைய நிலை, பயனாளிகள் தேர்வு நடைமுறை, தொகை வழங்கல் நிலவரம், நிலுவை மனுக்கள் மற்றும் குறைதீர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார். தகுதியான எந்த பயனாளியும் விடுபடக்கூடாது என்றும், பொதுமக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் விண்ணப்ப நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மகளிர் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், களத்தில் உள்ள சவால்களை உடனுக்குடன் தீர்க்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, வருவாய் வட்டாட்சியர் ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலர் ஞானராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேஸ்வரி ஆகியோர் திட்டங்களின் செயல்பாடு குறித்து விளக்கமளித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாயுமானவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் – அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
அக்காநாயக்கன்பட்டியில் ரூ.29.5 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடக்கம் – வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டத்தில் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026