தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பக்கிள் ஓடைக்கு கழிவுநீர் செல்லும் கால்வாயில் சிறுபாலம் கட்டும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்ணாநகர் 11வது தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதில் தடையால், அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் நேரில் முறையிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்வாயில் சிறிய பாலம் அமைத்து கழிவுநீர் தடையின்றி செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அப்பணிகளின் முன்னேற்றத்தையும், கழிவுநீர் வெளியேற்ற பணிகளையும் அமைச்சர் கீதாஜீவன் தளத்தில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அண்ணாநகர் 6வது மற்றும் 7வது தெருவிற்கு இடையிலும், 9வது மற்றும் 10வது தெருவிற்கு இடையிலும் உள்ள குறுக்குத் தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர் கனகராஜ், வட்டச் செயலாளர் பாலு (எ) பாலகுருசாமி, பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கல்யாணி, மணி, அல்பட் உள்ளிட்ட பலர் இணைந்து கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
அண்ணாநகரில் நீர்வழிப் பிரச்சனைக்கு தீர்வாக சிறுபாலம் – தளத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜனநாயகத்தை நசுக்கக் கூடிய முயற்சியாகவே SIR திட்டம்: கனிமொழி கருணாநிதி எம்.பி. கடும் விமர்சனம்!!
அடுத்த
தூத்துக்குடி முழுவதும் பசுமை அலை கிளப்பிய மிதிவண்டி பேரணி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026