தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி மக்கள் போல்பேட்டை முகாம் டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினா் வடக்கு மாவட்ட திமுக உள்பட 3 அலுவலகங்களிலும் அமைச்சா் கீதாஜீவனிடம் நோில் கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு அரசுத்துறை சாா்ந்த மனுவை சம்பந்தப்பட்ட அலுவா்களுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களின் மனுக்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சம்பந்தபட்டவா்களுக்கு தொிவிப்பதும் வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 6 வது வாா்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சந்தனராஜ், என்பவா் செவித்திறன் குறைபாடு இருப்பதால் தனக்கு செவித்திறன் கருவி வழங்க வேண்டும் கோாிக்கை மனு அளித்திருந்தாா். இம்மனு அமைச்சாின் கவனத்திற்கு சென்றதின் அடிப்படையில் நோில் விவரங்களை கேட்டறிந்த போது சந்தனராஜ் கடந்த காலத்தில் திமுக மாவட்ட செயலாளராக என். பொியசாமி இருந்த காலத்தில் இது போன்ற கருவி எனக்கு வாங்கி கொடுத்தாா்கள்.
அது வருடங்கள் பல கடந்து விட்டதால் செயல் இழந்து விட்டது. என்று கூறியதின் பெயாில் அதே போல் செவித்திறன் கருவியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் சந்தனராஜ்க்கு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலா் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உடனிருந்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முதியோருக்கு செவித்திறன் கருவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை போராட்டம் - புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அறிக்கை!!
அடுத்த
செங்கல்பட்டுக்கு வரும் 22 ம் தேதி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026