தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று இரண்டு முக்கிய பொதுப்பணிகள் தொடர்பாக மனு வழங்கப்பட்டது.
புதியம்புத்தூர்–மேலமடம் கைகாட்டி சந்திப்பிலிருந்து நடுவக்குறிச்சி வரையிலான சுமார் 1 கி.மீ தூர சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதை சேதமடைந்துள்ளதால் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டுமென கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் உதவி கோட்டப் பொறியாளருக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதேபோல், புதியம்புத்தூர் பூங்கா அருகிலுள்ள அங்கன்வாடி – 3 மையத்தில் மின் மீட்டர் மீது மழைநீர் கசிவு ஏற்படுவது மற்றும் அருகில் டிரான்ஸ்பார்மர் இருப்பது குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. எனவே மின் வசதிகளை சரிசெய்யவும், டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் முத்தமிழ்செல்வன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.
இந்த நேரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சாலைச் சீரமைப்பு மற்றும் அங்கன்வாடி பாதுகாப்பு பணிகள் அவசியம் – பாஜக வர்த்தக பிரிவு ஆட்சியரிடம் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாதி சான்றிதழ் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காட்டு நாயக்கர் சமூகத்தின் மனு — கண்டன முழக்கத்துடன் பொதுமக்கள் திரள்!!
அடுத்த
தூத்துக்குடியில் நவம்பர் 19ஆம் தேதி மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம் கடன்தொல்லை நீங்கி செல்வம் பெருக வேண்டி பக்தர்கள் வழிபாடுகள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026