தூத்துக்குடி, டிசம்பர் 3 தேர்மாறனின் 273-ஆம் பிறந்த நாள் முப்பெரும் விழா, தூத்துக்குடி தேர்மாறன் வளாகத்தில் புதன்கிழமையான இன்று மாலை நடைபெற்றது. விழாவில் நூல் வெளியீடும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஆசியுரை வழங்கியவர் பனிமய மாதா பேராலய அதிபர் ஸ்டார்வின் அடிகளார். தலைமையுரை வழங்கியவர் கோரமண்டல் சமூக நற்பணி மன்ற முன்னாள் தலைவர் பகவத்சிங்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். விழாவில் வேம்பாறு, வைப்பாறு, சிப்பிகுளம், பழையகாயல், குருவித்துறை, ஏரல், புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டணம், ஜீவாநகர், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளின் ஊர்நலக்கமிட்டித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பாண்டியபதி குடும்பத்தைச் சேர்ந்த பெரோஸ் மோத்தா வீர வணக்கம் செலுத்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் ஜெரோன் குமார் சிறப்புரை ஆற்றினார். குரூஸ் பன்னாந்தீஸ் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்புரை வழங்கினார்.
நெய்தல் யூ. அண்டோ எழுதிய ‘தூத்துக்குடி வரலாறு’ நூலை பாத்திமா பாபு வெளியிட்டு, பரவர் ஊர் கமிட்டி செயலர் ராஜ் பெற்றுக்கொண்டார். நூல் அறிமுக உரையை மணவை வினோ வழங்கினார்.
விழாவையொட்டி பலர் வாழ்த்துரை வழங்கினர். அதில் நெய்தல் எழுத்தாளர் இயக்க தலைவர் கலாபன் வாஸ், அன்னை பரதர் நலச் சங்க தலைவர் சேவியர் வாஸ், அ.தி.மு.க முன்னாள் சேர்மன் மனோஜ் குமார் கொரைறா, வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைச் செயலாளர் வில்லியம் மஸ்கர்னாஸ், அ.தி.மு.க. எட்வின் பாண்டியன், ம.தி.மு.க. நக்கீரன், பாரம்பரிய நாட்டுப்படகு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜாபோஸ் ரீகன், குரூஸ் பர்னாந்தீஸ் செயலாளர் சசிகுமார், அமலிநகர் பிரேசில் ஆகியோர் இடம்பெற்றனர்.
நன்றியுரை மற்றும் தொகுப்புரை வழங்கியவர் மணவை யோகேஷ்.
தமிழ்ச்செம்மல் நெய்தல் யூ. அண்டோ தலைமையில், குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றம் மற்றும் நெய்தல் எழுத்தாளர்–வாசகர்கள் இயக்கம் இணைந்து இந்த முப்பெரும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
தூத்துக்குடி
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தேர்மாறன் 273-ஆம் பிறந்த நாள் முப்பெரும் விழா – நூல் வெளியீடு, நலத்திட்ட உதவிகள் வழங்கல் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் மேம்பாட்டுக்கு புதிய வேகம் – G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்முயற்சியில் சாலை, குடிநீர், போக்குவரத்து சேவைகள் விரிவாக்கம்!!
அடுத்த
உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்துக்கு தொடர் வாழ்த்துகள்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026