தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பக்கத்தில் மடப்புரம் அருகில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு காரை கொஞ்சம் வெளியில் எடுத்து விடும்படி பணியில் இருந்த ஒப்பந்த காவலர் அஜித்குமாரிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
அப்போது அஜித் குமார் எனக்கு வாகனத்தை இயக்க தெரியாது. என்று கூறி இன்னொருவரை காரை கொஞ்சம் வெளியில் எடுத்து விடும்படி கூறி இருக்கிறார். அந்த நபரும் அஜித் குமார் கூறியபடி காரை வெளியில் எடுத்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தருக்கு உதவி செய்து இருக்கிறார்கள்.
சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இருவரும் வரும் வழியில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு தான் வந்திருக்கிறார்கள். மருத்துவமனையில் ஏதேனும் நகை தவற விட்டாரா என்பது தெரியவில்லை, கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும் வரும்போது நகைகள் இல்லாமல் வந்திருக்கிறார்கள் .
பின்னர் சாமிதானசம் செய்து விட்டு வந்து பக்தர்கள் பார்க்கும்போது காரில் நகை இல்லை என்பதை அறிந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனே அங்கு வந்த காவலர்கள் காரை வெளியே எடுத்து உதவி செய்ய கூறிய ஒப்பந்த காவலாளி அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து செல்லாமல் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி அடித்து ஜெய் பீம் படத்தில் வரக்கூடிய காட்சி போல் அரங்கேற்றம் செய்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவமானது முழுக்க முழுக்க லாக்கப் மரணம் முறையாக மடபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் ஆறு காவலர்கள் சேர்ந்து அஜித் குமார் என்பவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்திருக்கிறார்கள்.
இந்த லாக்கப் மரணத்தை ஸ்டாலின் அரசாங்கம் திசை திருப்ப பார்க்கிறது. எதற்கெடுத்தாலும் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவங்களை காரணம் காட்டி வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னமும் சிறையில் தான் இருக்கிறார்கள் காவலர்கள். யாரும் இதுவரை வெளியில் வரவில்லை, முதல்வர் ஸ்டாலின் உடைய ஆட்சி குளறுபடியான ஆட்சி அவர் புரிந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதுவரை 24 நபர்கள் லாக்கப் டெத் அடைந்திருக்கிறார்கள்.
இந்த திமுக அரசாங்கம் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை வைத்து மிகப்பெரிய நாடகம் ஒன்று நடத்தினார்கள். ஆனால் திமுக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இதுவரை நான்கரை ஆண்டு காலத்தில் லாக்கப் டெத்யில் 24 நபருக்கு மேல் இருந்திருக்கிறார்கள். யாருடைய வீட்டிற்கு சென்று அனுதாபம் கூறினார்கள்.
அதிகாரிகளின் தூண்டுதலால் மடப்புரம் பகுதியில் இந்த சம்பவம் நிறைவேறி இருக்கிறது. கண்துடைப்பாக ஐந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறி இருக்கிறார்கள். எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்திற்கு உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெய் பீம் படத்தில் வரக்கூடிய கதாபாத்திரம் போன்று அஜித்குமார் துடிதுடிக்க இருந்திருக்கிறார். அவரது இறப்புக்கு ஸ்டாலின் அரசு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும். "ஓரணியில் தமிழ்நாடு" என்று வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்க இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் என்ன சாதனை செய்தார்கள் நான்கரை ஆண்டு காலத்தில் 24 லாக்கப் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது.
திமுகவின் நான்கரை ஆண்டு காலத்தில் எந்த சாதனைகளும் செய்யவில்லை, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மீண்டும் பொற்கால ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைத்து கொடுப்பார்கள் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் டெத் சம்பவத்தை வைத்து மிகப்பெரிய நாடகத்தை நடத்திய திமுக மடப்புரம் லாக்கப் டெத்க்கு மவுனம் சாதிப்பது ஏன்? தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமூகநலத்துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் கூட்டாக அளித்த பேட்டியில் சொன்ன தகவல்!!
அடுத்த
தூத்துக்குடி தெற்கு ஸ்பிக் நகர் பகுதி, ராஜிவ் நகரில் ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ., தலைமையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026