கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான குழு இன்று (09.12.2025) ரோந்து பணியில் இருந்தது.
அப்போது திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த மாடசாமி (எ) ராதாகிருஷ்ணன் மகன் திலீபன் (எ) மனோகர் (26) என்று தெரியவந்தது. மேலும் அவர் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் திலீபனை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி
“தேசிய நெடுஞ்சாலையில் ‘கஞ்சா’ ரைடு – கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு வேகப்பிடியில் எதிரி சிக்கினார்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – ஓட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026