ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் விடியல் புதிய பேருந்து சேவைகள் உற்சாகமான முறையில் இன்று தொடங்கின. தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் (தடம் எண் 55ஏ) மற்றும் தூத்துக்குடி – மேலச் செக்காரக்குடி (தடம் எண் 56டி) வழித்தடங்களில் இயக்கப்படும் புதிய விடியல் பேருந்துகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேருந்து சேவையை தொடங்கி வைத்ததும், புதிதாக அறிமுகமான விடியல் பேருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து நேரடியாக ஏறிப் பயணம் செய்த எம்எல்ஏ சண்முகையா, பயணிகளுக்கு அசத்தலாகவே ஆச்சரியம் அளித்தார். பயணத்தின் போது புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் பாதையில் மக்களுடன் கலந்துரையாடி, சேவைக்கு அவர்களின் பாராட்டுகளையும் நேரில் கேட்டார்.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் ரமேஷ் பாபு, தொமுச தூத்துக்குடி நகர கிளை செயலாளர் லிங்குசாமி, பொருளாளர் மனோகரவேல், நிர்வாகிகள் கே. பரமசிவன், மாடசாமி, ஜோன், படையப்பா கணேஷ், பி. மாடசாமி உள்ளிட்டோர் மற்றும் திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதியம்புத்தூரில் துவங்கப்பட்ட இந்த விடியல் பேருந்து சேவை பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பான பயணத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடி
“புதியம்புத்தூரில் தொடங்கிய விடியல் சேவை… அதே பேருந்தில் எம்எல்ஏ பயணம் – ஓட்டப்பிடாரத்தில் மக்களை ஆச்சரியப்படுத்திய தொடக்கம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் – பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா கருத்து!!
அடுத்த
விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் சாலை மேம்பாட்டு பணி துவக்கம் – பலர் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்த மார்கண்டேயன் எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026