தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரை தரக்குறைவாக விமர்சித்த யூடியூபர் முக்தார் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்தையாபுரம் பல்க் பஜார் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை முத்தையாபுரம் நாடார் சங்கம் மற்றும் சுற்றுவட்டார நாடார் சங்கங்கள், இயக்கங்கள் இணைந்து நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநில வணிக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். மேலும் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் நாடார், பனங்காட்டு மக்கள் கழகம் மாநில வழக்கறிஞரணி செயலாளர் சிலுவை நாடார், காமராஜர் லட்சிய பேரவை பிரசன்னா, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி. மாரியப்பன் நாடார், “கர்மவீரர் காமராஜர் மனிதக் கடவுளாக வாழ்ந்து காட்டியவர். அவரை தகுதியற்றவர்கள் விமர்சித்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்பி திருச்சி சிவா பெருந்தலைவரை இழிவாக பேசியபோதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது முக்தார் போன்றவர்கள் துணிச்சலுடன் காமராஜரை இழிவாக பேசும் நிலை உருவாகியுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் ரமேஷ், முருகேசன், துரைசாமி, செல்வம், புஷ்பராஜ், சாமுவேல், வேல்முருகன், வழக்கறிஞர் ஜெயபால், நாராயணன், சிவா, குமார், கணேசன் தர்மகத்தா, பெனிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்புடன் காமராஜரை அவதூறாக விமர்சித்த யூடியூபர் முக்தாரை கைது செய்யக் கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
50 முதல் 100 வயதிற்கு மேற்பட்ட தாத்தா–பாட்டிகளுக்கு கலை வாய்ப்பு : சகா கலைக்குழுவின் மனிதநேய புதிய முயற்சி!!
அடுத்த
திமுக ஊழல்களை மறைக்கவே பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு – சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026