தூத்துக்குடி அருகே தருவைக்குளத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ் அனிட்டன் தலைமையேற்றார். தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் ஆண்ட்ரூபன், பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனி ராஜ், மதுரை பாண்டியனார் தொழிற்சங்க சேகர் பாண்டியன், திருநெல்வேலி பொதிகை தமிழ் சங்க கவிஞர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
“புத்தகம் ஏன் வாசிக்க வேண்டும்? நூலகம் ஏன் செல்ல வேண்டும்?” என்ற தலைப்பில் தூய மரியாதை கல்லூரி மாணவி அஸ்வர்னிகா சான்றா மேக்ஸ்லின் மற்றும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவி மரிய ரேஷன் ஆகியோர் சிறப்பாக பேசியனர்.
மேலும் மதுரை ராஜசேகர், சுப்பிரமணியம் கந்தசாமி, நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், திரவியம், அசோகன், ஜெயக்குமார், சேவியர் வில்சன், தூத்துக்குடியில் இருந்து குமிழ்மனை புத்தக வண்டி சார்பில் சைமன், எழுத்தாளர் மாறித்தவர், கரிசல் இலக்கிய அமைப்பின் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பேச்சுப்போட்டிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் புஷ்பராஜன், ஜெயம், சைமன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். ஓவியப்போட்டிக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியம்மாள் நடுவராக இருந்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றத்தின் லாரன்ஸ் அனிட்டன், திரவியம், அசோகன், ஜெயக்குமார், வில்சன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தூத்துக்குடி
தருவைக்குளத்தில் காந்தி பிறந்த நாள் – காமராஜர் நினைவு நாளையொட்டி பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி சிறப்பாக நடைபெற்றது!!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலி புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆனந்தகளிப்புடன் தொடக்கம்!
அடுத்த
“போப்பின் படத்தை அரசியல் போர்டில் வைத்தது ஏன்? – பாண்டியபதி பரதவர் நல சங்கம் கண்டனம்”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026