தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025 - 2026 ம் நிதி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி (11.09.2025) அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வைத்து நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்குமரன் முதல் பரிசுக்கும் தோழப்பன் பண்ணை அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி மீனா இரண்டாம் பரிசுக்கும் தூத்துக்குடி எக்ஸ்என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீ பேபிஷா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இரண்டு சிறப்பு பரிசுகள் வேப்பிலோடை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி லதா மற்றும் தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 7 ம் வகுப்பு மாணவி ஷனா நஸ்மீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கான பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி கோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி இளங்கலை உளவியல் இரண்டாம் ஆண்டு மாணவி மரிய ரேச்சல் முதல் பரிசுக்கும் தூத்துக்குடி வ.உ.சி கல்வியில் கல்லூரி ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவி வசந்தகுமாரி இரண்டாம் பரிசுக்கும் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி முதுகலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி அஸ்வர்னிஹா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ 5000 இரண்டாம் பரிசு ரூ 3000 மூன்றாம் பரிசு ரூ 2000 மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கும் சிறப்பு பரிசு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025 - 2026 ம் நிதி ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி லயன்ஸ் டவுண் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி - மேயர் ஆய்வு!!
அடுத்த
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026