தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் – ஸ்பிக்நகர் – முள்ளக்காடு நான்குவழிச் சாலையில் அணுகுசாலை இல்லாததால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியானதாக விவசாயி ஜோதிமணி தனது மனுவில் கவலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்களுக்கு அனுப்பிய மனுவில்,
சாலையின் இருபுறமும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது.
தவறான திசையில் வரும் வாகனங்கள் மற்றும் நெரிசலான போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்த துயரச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது, மதுக்கடை அருகிலுள்ள கூட்டம், கால்நடைகள் போன்ற காரணங்களும் ஆபத்தை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், உயிர்ப்பலி மேலும் ஏற்படாமல் இருக்க உடனடியாக அணுகுசாலை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“உயிர் இழப்பிற்கு முன் பணமா? உயிரா? என்பதை அரசு முடிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார் விவசாயி ஜோதிமணி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உயிர்களை காப்பாற்ற அணுகுசாலை அவசியம் – விவசாயி ஜோதிமணி மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பருவமழை முன்னெச்சரிக்கை – தூத்துக்குடி மாநகராட்சி ஆலோசனை கூட்டம்!!
அடுத்த
நாயுடு மகாஜன சங்க செயலாளர் ரெங்கசாமிக்கு மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026