தூத்துக்குடி, நவம்பர் 28—
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் வழங்கப்பட்ட எஸ்ஐஆர் படிவங்கள் முழுமையாக திரும்பபெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக தூத்துக்குடி மீகா தெரு பகுதியில் அதிமுகவினர் நேரடியாக கண்காணிப்பு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி சட்டசபை தொகுதியில் வழங்கப்பட்ட படிவங்களை மக்கள் சரியாக பூர்த்தி செய்து பி.எல்.ஓ.விடம் ஒப்படைக்குகிறார்களா என்பதை ஒவ்வொரு பகுதியிலும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். எங்காவது குறைபாடு இருந்தால் வீடு வீடாகச் சென்று தாமே படிவங்களை திரட்ட வேண்டும் என தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி மீகா தெரு பகுதியில் எஸ்ஐஆர் படிவங்கள் சரியான முறையில் திரும்பபெறப்பட்டுள்ளனவா என்பதை மத்திய வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெய்கணேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் நவ்ஷாத், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராஜேஸ்வரி, பகுதி மாணவரணி செயலாளர் ரியாஸ், மகளிரணி அகிலா, சிறுபான்மை பிரிவு மைதீன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மீ.கா தெருவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதிமுக தீவிர கண்காணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை பாதிப்பு: கீதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் உபகரண பதிவு முகாம் தற்காலிக ரத்து!!
அடுத்த
டிலைட் ரைபிள் அகாடமிக்கு பொற்காலம்: மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெற்றி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026
இம்மானுவேல் சேகரன் 102-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
09 Oct 2026
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து அக்.14-ல் ஆர்ப்பாட்டம்!!
09 Oct 2026