திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத் தலின்படி, பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், கவிதாதேவி, நாகராஜன், அருணாதேவி, அருண்குமார், ராமர், பிரபு, ஜேசையா, நிக்கோலாஸ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, சாரதி, நைஸ் பரமசிவம், ஆனந்தசேகர், வழக்கறிஞர்கள் ரூபராஜா, நாகராஜன்பாபு, செய்யது காசிம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் இபி.கருப்பசாமி, வேல்முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.



வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சேகர், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், செல்வராஜ், செந்தில்குமார், மூக்கையா, முனியசாமி உள்ளிட்டோரும், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமார், கந்தசாமி, ரெக்ஸின், இசக்கிராஜா, பொன்னப்பன், ஆறுமுகம், கனகராஜ், ஜான்சிராணி, ராஜேந்திரன், நாகேஸ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராஜன், ஆனந்தி, குமார், செல்வம், பிரபாகர், மணி, சுமன், திலகராஜ், ரேவதி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, சாந்தா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.