தூத்துக்குடி, செப்.28
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை (செப்.17) முன்னிட்டு நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சேவை தினங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் பகுதியாக இன்று (28.09.2025) தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணியின் சார்பில் வடக்கு ராதா வீதியில் உள்ள டி.ஏ. திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம், திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை, ஐ. பவுண்டேஷன் கண் மருத்துவமனை, பொது மருத்துவம், புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம் ஆகியவை நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிரணி மாவட்ட தலைவி வெள்ளைத்தாய், மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் கிழக்கு மண்டல பொறுப்பாளர் சத்தியசீலன், மாவட்ட முன்னாள் பொருளாளர் சண்முகசுந்தரம், பாலமுருகன், டாக்டர் அரவிந்த், மாவட்ட செயலாளர் மாசாணம், உஷா தேவி, செல்வி லட்சுமி, வேல் கனிக்கொறையாரா, ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பாஜக சார்பில் மருத்துவ முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் காமாட்க்ஷி பாலி கிளினிக் புதிய மருத்துவமனை திறப்பு!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026