தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக கூறப்படும் தனியார் மதுபான பார் ஊழியரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 15 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி அன்னை தெரசா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த சுரேந்திரன் மகன் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் தனியார் மதுபான பாரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 31.07.2026 அன்று காலை, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் டி.குமாரவேல் தலைமையிலான போலீசார் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து சென்றனர். அப்போது, மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் அருகே வெள்ளை நிற சாக்குப் பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் இருந்த சாக்குப் பையை சோதனை செய்தபோது, மூடி திறக்கப்படாத நிலையில் பல்வேறு வகையான பிராண்டி பாட்டில்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவற்றில் Old Napoleon VSOP Deluxe Brandy 9 பாட்டில்கள், 1848 Premium XO Brandy 2 பாட்டில்கள், LA MARTINE VSOP Premium Brandy 2 பாட்டில்கள், King Louis XIV XO French Brandy 2 பாட்டில்கள் என மொத்தம் 15 மதுபான பாட்டில்கள் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அவற்றை வைத்திருந்ததாக ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்து TNP (Amendment) Act 2024-ன் பிரிவு 4(1)(C) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே தனது குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே ‘கள்ளச்சந்தை’ திறப்பு! தூத்துக்குடியில் 15 பிராண்டி பாட்டில்களுடன் ஒருவர் கைது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
50 வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் அழைப்பு: பிரையண்ட் நகர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்!!
அடுத்த
“தேர்தல் வாக்குறுதியான ரூ.20 ஆயிரம் தடைக்கால நிவாரணம் எங்கே?” தவெக அரசுக்கு மீனவர் பெண்கள் கேள்வி – உடனடியாக அறிவிக்காவிட்டால் போராட்டம்: டிலைட்டா ரவி எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026