தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள டி.சவேரியார்புரம் புனித சேவியஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் குழந்தை ராஜன் தலைமை தாங்கி முன்னிலை வகிக்க, தலைமை ஆசிரியர் மாரி செல்வராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் லயன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் வழங்கினார். மேலும் ஆரோவாட்டர் பில்டர் வகைக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், “கல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உயர்த்தும் முதலாவது அடித்தளம். நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்வவற்றை மதித்து நடந்து முன்னேற வேண்டும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத் தலைவர் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால், இயக்குநர் விமல்ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் செயல்பாட்டுக்கு—மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
“தூத்துக்குடியில் நேரு நூற்றாண்டு நினைவு — ஐஎன்டியூசி தலைமையில் மரியாதை விழா”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026