தூத்துக்குடி, நவம்பர் 19 கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடத்தில் இன்று கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் மிகத் திரளான பக்தர்கள் பங்கேற்பில் நடைபெற்றது. தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற இத்தலம், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வீகத் தலமாகப் போற்றப்படுகிறது.
சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் வழிபாட்டைத் தொடங்கியது. பின்னர் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
மதியம் 12.30 மணிக்கு பக்தர்களின் கடன்தொல்லை நீங்கி எதிரி துன்பங்கள் விலக, திருமண வரம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, செல்வ வளம் பெற வேண்டி மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா காலபைரவர் மற்றும் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனையும் நடந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில், திரளான பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டன. பக்தர்கள் அனைவரும் தெய்வ அருளைப் பெற்றுவிட்டு ஆனந்தமாகப் பீடத்தில் இருந்து திரும்பினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெற்ற மிளகாய் வற்றல் மஹா யாகம் — பக்தர்களின் பலநல வாழ்வுக்காய் பிரத்தியங்கிராதேவியின் அருள் வழிபாடு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழகத்தில் நூலகச் சேவையை உயர்த்திய முன்னோடிகளுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டன!!
அடுத்த
புதூர் பள்ளி பாலியல் சீண்டல் வழக்கு: குற்றாசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் – தவெக துணைச் செயலாளர் எபநேசர் கடும் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026