தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி வளாகத்தில் கலைப்பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பகுதிநேர நாட்டுப்புறக்கலை பயிற்சி மையத்தின் 2024–25ஆம் ஆண்டுக்கான அரசுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சிறப்பு விழாவில் பாராட்டப்பட்டனர்.
டி. சவேரியார்புரம் தாளமுத்துநகர் காவல் நிலையம் எதிரிலுள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மேயர் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நாட்டுப்புறக் கலைகளை மேம்படுத்தும் வகையில் மாணர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது குறிப்பிடத்தக்கது என அவர்கள் தெரிவித்தனர்.
2025–26 சேர்க்கை தொடக்கம் – நாட்டுப்புறக் கலைகளுக்கு பெறுமதி அதிகரிப்பு
வில்லிசை, ஒயிலாட்டம், புலியாட்டம், நாட்டுப்புறப்பாடல் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளுக்கான 2025–26 கல்வியாண்டு புதிய சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேர்க்கை விவரங்கள்:
வயது: 17 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் (ஆண்/பெண்)
நேரம்: வெள்ளி & சனி – மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை
ஆண்டு கட்டணம்: ரூ. 500
தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி – அரசுத் தேர்ச்சி சான்றிதழ்
8ஆம் வகுப்பு தேர்ச்சி அற்றவர்கள் – பங்கேற்பு சான்றிதழ்
தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பை அனைத்து கலை ஆர்வலர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. மு. சிவகாம செல்வி கேட்டுக்கொண்டார்.
நாட்டுப்புறக் கலை மறைவதற்கானது அல்ல – மரபாகத் தொடர்வதற்கானது!
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலை தேர்ச்சி பெற்றோருக்கு ஆட்சியர்–மேயர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணியில் கதவு எண்–சொத்துவரி மோசடி: இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வீரமுருகன் மனுநீதி நாளில் ஆட்சியரிடம் புகார் மனு!!
அடுத்த
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026