தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ள யாதும் அறியான் திரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகர்களாக அமர்ந்து படத்தை ரசித்துப் பார்த்தனர்.
இந்த படமானது திரில்லர் படமாகவும் அனைவரும் விரும்பும் படமாக அமைந்துள்ளதாக திரைபடத்தின் நடிகர் மற்றும் இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். திரையரங்குகள் கிடைக்காமல் பல்வேறு பகுதிகளில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் வரம் ஒரு காட்சியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் 2026 ல் முதல்வர் என காட்சிகள் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குனர் கோபி இயக்கத்தில் தினமலர் தினேஷ் அறிமுகம் ஆகி நடித்தும் பிரபல குணச்சித்திர நடிகர் அப்புகுட்டி மற்றும் கே.பி.ஒய். ஆனந்த் பாண்டியன் நடித்துள்ள யாதும் அறியான் என்ற திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இன்று காலை வெளியான திரைப்படத்தை இயக்குனர் கோபி மற்றும் நடிகர் தினேஷ் அப்புகுட்டி ஆனந்த் பாண்டியன் ஆகியோர் ரசிகர்களுடன் ரசிகர்களாக அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து கேக் வெட்டி ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் நடிகர் தினேஷ் மற்றும் அப்புகுட்டி ஆனந்த் பாண்டியன் ஆகியோருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் 2026 ல் தமிழக முதல்வர் விஜய் என பத்திரிக்கை சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து யாதும் அறியான் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்
தூத்துக்குடி மக்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளதாக எல்லோரும் கூறுகின்றனர். ரசிகர்கள் இன்னமும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும். உங்கள் வீட்டு பையனாக என்னை நினைத்து மேன்மேலும் வளருவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
முதல் படம் என்பதால் முதலில் நடிக்கும் போது கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் போக போக நன்றாக நடித்துள்ளேன். தற்போது படம் வெளியாகி மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என அறிமுக நடிகர் தினமலர் தினேஷ் தெரிவித்தார்.
படத்தின் இயக்குனரான கோபி கூறுகையில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் வரக்கூடிய திரில்லர் காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். தற்போது குறைந்த அளவிலான திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கருத்துக்கு பின்பு அதிக திரையரங்குகளில் வெளியாகும் திரையரங்குகள் கிடைப்பதில் எங்களுக்கு சிக்கல் உள்ளது. ரசிகர்களுக்கு த்ரில்லர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். இந்த படத்தில் அதிகப்படியான என்டர்டைமெண்டும் படத்தில் உள்ளது என தெரிவித்தார்.
பேட்டியின் போது படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர்கள், படக்குழுவினர் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இன்று வெளியான "யாதும் அறியான்" படத்தின் கதாநாயகன் தினமலர் தினேஷ், இயக்குனர் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக மூத்த முன்னோடிகளை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் கௌரவிப்பு!!
அடுத்த
முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரி நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் மனு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026