திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு ஓருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் பொற்கிளி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசுகையில்,
உங்களது பேரன் உங்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக கலைஞாின் வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் வந்துள்ளேன் என்று பேசியது மட்டுமின்றி கழகத்தின் ஆனிவேராக இருந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள மூத்த முன்னோடிகளை சந்தித்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாா்.
தங்கள் வாழ் நாளில் தன் நலம் கருதாமல் கழகமே குடும்பம் என கழகத்தின் இக்கட்டான காலங்களிலும், போராடங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்று கழகமே உயிர் என வாழ்ந்த கழகத்தின் மூத்த முன்னோடிகள் பலரை பெருமைப்படுத்தும் விதமாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள மூத்த முன்னோடிகள் இல்லத்திற்கே வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று நலம் விசாாித்து ஊக்கத்தொகை வழங்கினாா். 2026 ல் நடைபெறவுள்ள தோ்தலில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த உங்கள் குடும்பத்தினா் துணையாக இருக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டாா்.
மூத்த உறுப்பினர் ஓருவா் கூறுகையில் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ம்ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் கட்சி ஆரம்பித்த காலக்கட்டத்தில் பயணித்த பலருக்கும் தலைமை கழகம் உத்தரவிற்கிணங்க எல்லா பகுதியில் உள்ளவா்களை தேர்வு செய்து கௌரவிக்கும் விதமாக பொற்கிளிகள் ஏற்கனவே தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இருப்பினும் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றியின் இலக்கை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதற்கேற்றாற் போல் தமிழகம் முழுவதும் அனைவரும் பணியாற்றி வருகின்றனர்.
இன்றைய தலைமுறையினருக்கு கடந்த காலங்களில் கழகத்திற்காக வாழ்ந்த முன்னோடிகள் பற்றிய முகவுரைகள் தொிய வேண்டும். அதை எந்த முறையில் கெளரவிக்க வேண்டும். என்பதற்காக நோில் வந்து கௌரவித்தனா். அப்போது உங்களது தந்தை பொியசாமி கடந்த காலத்தில் பணியாற்றிய பல வரலாறுகளையும் எடுத்துக்கூறி கழகம் என்றால் எப்படி பணியாற்ற வேண்டும் பொது வாழ்க்கை என்றால் பொதுமக்களோடு நட்பை எந்த முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களையும் அமைச்சாிடம் பாிமாறிக் கொண்டனர்.
இந்தநாளை என் வாழ்நாளில் ஓரு பொன்னாளாக கருதுகிறேன். என்று கூறினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் செல்வம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பர்ட், உள்பட பலர் சந்திப்பின் போது உடன் சென்றனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக மூத்த முன்னோடிகளை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் கௌரவிப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் நடைபெறுகிற நான்காம் நாள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை!!
அடுத்த
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இன்று வெளியான "யாதும் அறியான்" படத்தின் கதாநாயகன் தினமலர் தினேஷ், இயக்குனர் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026