தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் கழக BLA-2 பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது, வாக்காளர்களின் பெயர்கள் சரியாக சேர்க்கப்படுவது, தவறுகள் திருத்தப்படுவது மற்றும் வாக்குரிமை அனைவருக்கும் உறுதிசெய்யப்படுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான மாண்புமிகு கீதா ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அவர் தனது உரையில், “வாக்காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். ஒவ்வொரு வாக்காளரின் பெயரும் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். திமுக பாக முகவர்கள் பொதுமக்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் விவரங்களை சரிபார்த்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
மேலும், வாக்குச்சாவடி வாரியாக உள்ள பிரச்சினைகள், திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் சிறப்பு திருத்தப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அமைப்பினர், தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி நிலை நிர்வாகிகள், பெண்கள் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து திமுக பாக முகவர்கள் ஆலோசனை — அமைச்சர் கீதா ஜீவன் வழிகாட்டல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் தொகுதியில் கல்வி மற்றும் பொதுமக்கள் நலனைக் குறிவைத்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடக்கம்!!
அடுத்த
தூத்துக்குடியில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – மேயர் ஜெகன் தலைமையில் அதிரடி நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026