தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஒ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் பட்டுக்கனி, செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவை சந்திரா, பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, பொய்யாமொழி, வெள்ளப்பாண்டி, முத்து, சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், மீனவர் அணி செயலாளர் வின்சென்ட், இளைஞரணி செயலாளர் சுதாகர், தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன், கலை இலக்கியப் பிரிவு செயலாளர் ஜெயபால், இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை, அங்குசாமி என சுசீந்திரன், தாளமுத்து நகர் ஊராட்சி செயலாளர் முனியசாமி, இளைஞர்–இளம்பெண்கள் பாசறை தலைவர் மகாராஜன், மன்ற இணைச் செயலாளர்கள் மந்திரம், செல்வராஜ், மேற்கு பகுதி மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன் உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி முழுவதும் மரியாதை நிறைந்த சூழலில் இந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாள்: ஓ.பி.எஸ் அணியினர் ஏசாதுரை தலைமையில் மலரஞ்சலி – பொதுமக்களுக்கு அன்னதானம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் தூத்துக்குடியில் மலரஞ்சலி!!
அடுத்த
சாலையில் சுதந்திரம்…? மாநகராட்சியின் ‘பிரேக்’ – ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026