தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாளை முன்னிட்டு 40 வது வார்டு அதிமுக சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் சன் பீட்டர் கோவில் தெருவில் 550 பேருக்கு சில்வர் பாத்திரம் ஐந்து ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் வழங்கி பேசுகையில்,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி செய்தாா். மக்களுக்கான ஆட்சி என்றால் அது அதிமுக தான் அந்த ஆட்சியில் தொடா்ந்த பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மக்கள் உணா்ந்து கொண்டு மக்களுக்கு பணி செய்பவா்களை தோ்ந்தெடுக்க வேண்டும். இன்னும் ஒவ்வொரு தொண்டன் மற்றும் பெண்கள் மனதில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. மேலும் மாநகராட்சியில் சொத்து வரி குடிநீர் வரி மற்றும் குப்பைக்கு கூட வரி போட்டு பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளனா். திரைப்படத்தில் வேஷம் போட்டு நடித்த நடிகா்களை பார்க்க செல்லுங்கள். ஆனால் மனநிலையை மாற்றிக் கொண்டு அவா் பின்னால் சென்று விடாதீர்கள். நீங்கள் நினைக்கிற மாதிாி அவா் இப்படி பட்ட நபா் இல்லை. என்று விஜய் மீது மறைமுக தாக்குதலை முன் வைத்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேசினாா்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட முன்னாள் மீனவர் அணி செயலாளர் அகஸ்டின், இணைச் செயலாளர் ஜோசப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வட்ட செயலாளர் அந்தோணி, சகாயராஜ், முன்னாள் கவுன்சிலா் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரோமால்டு, சிறுபான்மை பிரிவு அசன், அபுதாகிர், பிரபாகா், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஜேடி அம்மா, பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி குரூஸ்புரம் அண்டோ, அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கர், சகாயம், டெரன்ஸ், பெலிக்ஸ், ஜோசப், ஜேசுராஜ், வழக்கறிஞர் ராஜாராம், தெர்மல் முருகேசன், வாா்டு நிர்வாகிகள் உதயகுமார், ஜான்சன், வர்கீஸ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், ஜெனிஸ், வசந்த், திவாஸ், ஜெப்பி, ஸ்டெபின், அஜித், கேஸ்ட்ரோ, கிராஸ்வின், அஜய், ரியாஸ், ஜான்சன், ஜாஸ்பர், சோல்ஜர், செல்ட்டன், ஜாக்சன், இன்பென்ட், பிரான்சிஸ், சரான், ஜெகதீஷ், ஸ்டார்வின், சரான், டேனியல், பிரைட்டன், சுரேஷ், பிரபாகரன், அசோகன், செல்வராஜ், தாமஸ், சசிகுமார், பெவின் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திரைப்படத்தில் வேஷம் போட்டு நடித்த நடிகரை பாா்க்க செல்லுங்கள் மனநிலையை மாற்றி விடாதீர்கள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைக்கும் வரி விதித்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் குற்றச்சாட்டு!!
அடுத்த
தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழா அசன விருந்துடன் நிறைவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026