தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பான மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.



கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசுகையில், “திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. எல்லோருக்கும் புரியும் என்று நான் நினைக்கிறேன். நன்றி, வணக்கம்” என்று உருக்கமாகப் பேசினார்.



இதையடுத்து தலைமை கழக பிரதிநிதிகளும், மாநில விவசாய அணி துணைச்செயலாளருமான நல்ல சேதுபதி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் ஆகியோர் கட்சி அமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினர்.



கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெபத்தங்கம், பிரேமா, ஆறுமுகப்பெருமாள், பொருளாளர் ராமநாதன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாநில பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார்,



ஆறுமுகபாண்டியன், முத்துச்செல்வன், சாகுல்ஹமீது, தலைமை கழக வழக்கறிஞர் மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், கொம்பையா, சதீஷ், நவீன்குமார், இளங்கோ, பாலசிங், ரமேஷ், கோட்டாளம் ஜோசப், பாலமுருகன், இசக்கி பாண்டியன், சுரேஷ்காந்தி, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், செல்வக்குமார், சாரதா, பொன் இசக்கி, அருண்குமார், சுரேஷ், ராமசாமி, ரவி என்ற பொன்பாண்டி, சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பால்துரை, ஸ்டாலின், செந்தில்குமார், அந்தோணி தனுஷ்பாலன், ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், பூபேஷ்நாதன், வழக்கறிஞர்கள் பூங்குமார், கிருபாகரன், அஜிதா, ஆக்னல், கபடிகந்தன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.