தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (01.11.2025) மாலை சங்க கட்டிடத்தில் வைத்து தலைவர் ராமசாமி நாயுடு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் நாயுடு மற்றும் செயலாளர் ரெங்கசாமி நாயுடு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 2026 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் 700 பிரதிகள் தயாரித்து, ஆயுள் சந்தா உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனுடன், சங்கத்தின் வளர்ச்சியும் உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்களும் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மோகன் நாயுடு, ஆதி நாத ஆழ்வார் நாயுடு, கே.ஆர். சுப்பிரமணியன் நாயுடு, வெங்கடேசன் நாயுடு, வெங்கட கிருஷ்ண ராஜன் (எ) செல்லச்சாமி நாயுடு, வெங்கட கிருஷ்ணன் நாயுடு, முனியசாமி நாயுடு, எஸ். சங்கரநாராயணன் நாயுடு, சங்கரநாராயணன் நாயுடு, பெருமாள் நாயுடு, அங்கு சாமி நாயுடு, நடராஜன் நாயுடு, செல்வராஜ் நாயுடு, மந்திர மூர்த்தி நாயுடு, முருகன் நாயுடு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.
சங்கத்தின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து உற்சாகமாக கலந்துரையாடப்பட்ட இக்கூட்டம், நாயுடு மகாஜன சங்கத்தின் ஒற்றுமை மற்றும் சமூக சேவை உறுதியை வெளிப்படுத்தியது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க செயற்குழு கூட்டத்தில் 2026 ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு நாளை சிறப்பாகக் கொண்டாடிய நாம் தமிழர் கட்சி – ஓட்டப்பிடாரம் தொகுதி!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ — கொசு ஒழிப்பு பணிகளில் துரித நடவடிக்கை!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026