தூத்துக்குடி மாநகராட்சி 29வது வார்டு பகுதி சபா கூட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாநகராட்சி சுகாதார அலுவலர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாரியம்மாள் பேசும்போது,
“புதிதாக கட்டப்பட்ட ஆண்கள் கழிப்பறை முறையாக இல்லை; அரைகுறை நிலையில் உள்ளது. சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் கொசுக்கள் அதிகரித்துள்ளன. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பயமாக உள்ளது. குப்பை வண்டி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வருகிறது; தினசரி அகற்றும் முறை அமைய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
மேலும், ரகுமத்தலாபுரம் பகுதி மக்கள், “பேவர் பிளாக் கல் சரியாக அமைக்கப்படவில்லை; குண்டும் குழியுமாக உள்ளது. புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் கடைகள் 10 அடி சாலை பகுதியை மறைத்து கட்டப்படுவதால், 30 அடி ரோடு 18 அடியாக குறைந்து போயுள்ளது. போக்குவரத்து சிரமமாக உள்ளது. மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்,” என்று கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளுக்கு பதிலளித்த மண்டல தலைவர் கலைச்செல்வி, “கொசு மருந்து தெளித்தல், சாக்கடை சுத்தம், தெருவிளக்கு பழுது, குப்பை அகற்றும் பணிகள் — அனைத்தும் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும்,” என்று உறுதியளித்தார்.
கூட்டத்தில் 29வது வார்டு செயலாளர் கதிரேசன், வட்ட பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பெருமாள்புரதத்தை சேர்ந்த மாரியம்மாள் குரல் கொடுத்த பிரச்சினைகள் — தூத்துக்குடி பகுதி சபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கை ‘சூடு’
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மனம் திறந்து கூறும் வேண்டுகோள் – “ஓய்வூதிய ஆணைகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அரசு, எங்கள் 4½ ஆண்டு கோரிக்கையையும் நிறைவேற்றட்டும்!”
அடுத்த
மேயர் ஜெகன் மக்கள் வாசலில் — திமுக அரசின் சாதனைகள் எடுத்துச் சொல்லி ஆதரவு கோரினார்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026