தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் 363 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இத்திட்டம் குறுக்குச்சாலை, சந்திரகிரி உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்த குடிநீர் திட்டத்தின் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் ஆகியோர் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாய்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொண்டு பணிகள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், ஜவஹர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், அருள்மிகு ஸ்ரீ சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தனராஜ், சண்முகையா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த், கிளைச் செயலாளர்கள் சங்கர், லட்சுமணன், கணேசன், இளைஞரணி உறுப்பினர்கள் மகேஷ், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஒவ்வொரு வீட்டுக்கும் தூய்மையான குடிநீர் வழங்குவதே எங்கள் இலக்கு!” என்று பார்வையின்போது கனிமொழி கருணாநிதி உறுதியளித்தார்.
தூத்துக்குடி
கனிமொழி எம்.பி, கீதா ஜீவன் அமைச்சர், மார்கண்டேயன் எம்எல்ஏ இணைந்து ஆய்வு — 363 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மாற்று வாய்ப்புகள் — தூத்துக்குடியில் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு, கடற்பாசி வளர்ப்பு பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன!
அடுத்த
“பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தரம் தாழ்ந்தது!” — தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கடும் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026