தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) சார்பில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள SIR நடைமுறையை கண்டித்தும், திருநெல்வேலி கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் PUCL மாவட்ட தலைவர் முனைவர் பாதர் எக்ஸ்.டி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் கனலி பேராசிரியர் பாத்திமா பாபு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல சமூக, மக்கள் இயக்க தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரல்களை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில துணைச் செயலாளர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி பேசினார்.
நிகழ்ச்சியை PUCL மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா, தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா போஸ் ரீகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்று, ஜனநாயக உரிமைகளை குறைக்கும் எந்த நடவடிக்கையையும் பொது மக்கள் ஏற்க மாட்டார்கள் என வலியுறுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் PUCL தலைமையில் SIR நடைமுறை மீதும் வழக்கறிஞர் தாக்குதல்மீதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோரம்பள்ளம் குளமும் அத்திமரப்பட்டி மதகிலும் நீர்வரத்து கண்காணிப்பு – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
ஸ்ரீசித்தர் பீடத்தில் பிரத்தியங்கிரா தேவி மஹா யாகம் — சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற வைபவம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026