திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (27.11.2025) தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பல்வேறு சமூகநல நிகழ்வுகள் நடைபெற்றன.
காலை 9.00 மணிக்கு பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் கேக் வெட்டும் விழா நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து விழாவை கொண்டாடினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பல்வேறு சேவை நிறுவனங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் சிறப்பு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
1. செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி – பிரையண்ட் நகர் 3வது தெரு
2. நேசக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லம் – பிரையண்ட் நகர் 1வது தெரு
3. பாசகரங்கள் முதியோர் இல்லம் – சிதம்பர நகர்
4. பிளசிங் முதியோர் இல்லம் – பி & டி காலனி
5. பத்திரப்பதிவு அலுவலகம் அருகிலுள்ள முதியோர் இல்லம்
6. நியூ பாசகரங்கள் – பால்பாண்டி நகர்
மாலை 4.30 மணிக்கு சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுகளில் மாவட்ட, மாநகர், பகுதி, வட்ட நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி விழா கொண்டாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்!!
அடுத்த
பொது நலச் செயல் குறித்து விழிப்புணர்வு : “உணவை வீணாக்காதீர்” — Dr. சகா அழைப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026