தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பிரதான சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு மற்றும் திரேஸ்புரம் பகுதிகளில் அமைக்கப்பட உள்ள மின் கோபுர விளக்குகளுக்கான இடங்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இணைந்து கலந்து கொண்டனர்.
மேயர் அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சாலைகள் பிரகாசமாகவும் இருந்து, இரவு நேர போக்குவரத்து சிரமம் இல்லாமல் நடைபெறும்வகையில் இந்த மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுவதாகவும், விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உயர்தர மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்க வேண்டும் – நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வலியுறுத்தல்!!
அடுத்த
ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026