தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்பபுரம் கிராமம் பசும்பொன் நகரில், மக்கள் நீண்ட நாளாகக் கோரிக்கை வைத்திருந்த வாய்க்காலில் குளிப்பதற்கான புதிய படித்துறை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு (20.07.2024) அன்று முறப்பநாடு தர்ம தேவதை கலையரங்கில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதற்கான மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து, (17.02.2025) அன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பசும்பொன் நகர் வாய்க்கால் பாலம் அருகே புதிய படித்துறை அமைக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, எம்.சி. சண்முகையா MLA நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்பதை வசவப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மு. கணேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், வசவப்பபுரம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அருகிலும், அனவரதநல்லூர் கிராமம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் பிள்ளையார் கோவில் அருகிலும், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா MLA நிதியில் வசவப்பபுரம் பகுதியில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026