தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராம இளைஞர் காங்கிரஸ் கமிட்டி அலுவலக மேடையில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வெள்ளக்கண் நாடார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மனும், தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளருமான வி.பி.ஆர். சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் வெ. ராமஜெயம் வரவேற்புரை ஆற்றினார்.
பெருந்தலைவர் காமராஜர் சிலையை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக பொதுச் செயலாருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இவ்விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டபிடாரம் - எம்.சி. சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி எஸ். அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி, திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி, வட்டார காங்கிரஸ் தலைவர் ஐ. அபிஷேக், துணைத் தலைவர் கு. பால திணேஷ், கிராம கமிட்டி செயலாளர்கள் பெ. ஜெயதுரை, யோ. வசந்தகுமார், பொருளாளர் த. ஜெயம் நாடார், குலையன்கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் டி.வி. ஹேம்நாத் ஜெகன், முன்னாள் ஊராட்சி தலைவர் குணதுரை மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குலையன்கரிசல் கிராமத்தில் காமராஜரின் வெண்கல முழு திருவுருவச் சிலையை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓசநூத்து கிராம மக்களின் கோரிக்கை ஏற்பு - எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து 573 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026