தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அரசியல் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, கழக செயல்வீரர்களுக்கு “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” திட்டம் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மற்றும் பொறுப்புகளை வழங்கினார்.
பின்னர், சிவன் கோவில் பின்புறம் பத்திரகாளி அம்மன் கோயில் தெருவில் வீடுதோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி, மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில், மக்களிடையே ஆதரவை கோரி, தொடர்ச்சியான வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க திமுகவுக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பலர் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்த “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு: 39வது வார்டில் உற்சாகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் இலவச அழகுகலை பயிற்சி மையம் திறப்பு!!
அடுத்த
தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மனம் திறந்து கூறும் வேண்டுகோள் – “ஓய்வூதிய ஆணைகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அரசு, எங்கள் 4½ ஆண்டு கோரிக்கையையும் நிறைவேற்றட்டும்!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026