தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்பாக விவசாய நிலங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில் உப்பாத்து ஓடை உள்ளிட்ட வடிகால் பகுதிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் தெரிவித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், தற்போது கழிவுநீர் ஓடைகள் ஆழம் குறைந்திருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக கூறினர். மேலும், கழிவுநீர் ஓடைகளில் உள்ள கற்களை அகற்றி, ஆழமாக தோண்டினால்தான் தண்ணீர் சீராக கடலுக்குச் செல்லும் என்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக இரண்டு ஜேசிபிகளை பயன்படுத்தி வடிகால் தோண்டுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். மேலும், மழை தொடங்கும் முன்னரே பணிகளை துவங்கி விரைவாக முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், அத்திமரப்பட்டி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத்தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராசு, பொருளாளர் சின்னக்குட்டி தானியேல், வேளாண்மை இயக்குநர் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் செல்வக்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அத்திமரப்பட்டி – முள்ளக்காடு பகுதியில் மழைக்கு முன் வடிகால் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!
அடுத்த
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்க வேண்டும் – நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026