தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் மற்றும் கால்வாய் அடைப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணி செய்ய வேண்டும் என வழிகாட்டப்பட்ட நிலையில், நிலைமையை நேரடியாக கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை விரைவாக அகற்றியும், கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்தியும், பொதுமக்களுக்கு தடங்கல் ஏற்படாது நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, இளநிலை பொறியாளர் செல்வம், கவுன்சிலர் விஜயகுமார், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கொட்டும் மழையிலும் பொன்னாண்டி நகர் மழை நிலையை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மழைநீருக்கும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் நடந்த அரை இரவுக் கவுரவக் குரல் பேச்சு!”
அடுத்த
தூத்துக்குடி வெள்ள ஆய்வில் மனம் நெகிழ்ந்த தருணம்: பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று குழந்தைக்கு ‘மலர்’ என்ற பெயரை சூட்டிய கனிமொழி எம்.பி.!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026