தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜா பங்கேற்ற கபடி போட்டியில் தேவேந்திர ராஜா அணி வெற்றி பெற்றது என்ற காரணத்திற்காக கடந்த 10 ஆம் சாதிவெறி கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட பள்ளி மாணவன் ராஜா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துக் வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாநகரில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும், கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார் தலைமையில், மாவட்ட செயலாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினரும், தென்னாட்டு சாம்பவர் ஒருங்கிணைப்பாளருமான குட்டி பாண்டியன் முன்னிலையில், நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தை தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜாவை புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும், கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தனது வருத்தங்களை தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தனது கண்டனத்தையும் பதிவு செய்தார்.
சந்திப்பின் போது முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில செயலாளர் பரணிமாரி, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவனை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தியார் ஆறுதல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மூத்த எம்.ஜி.ஆர்., ரசிகர் மற்றும் கழக நிர்வாகிகளை கௌரவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
அடுத்த
குருதிகளை தானமாக வழங்கிய கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026