தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த தூத்துக்குடி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் கடுமையாக காயமடைந்தார்.
இன்று (27.11.2025) இதனைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்து உடல்நல நிலை குறித்து கேட்டறிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாப்பிள்ளையூரணி வந்தார்.
சரவணகுமாரின் தொடர்ந்த சிகிச்சை, மருத்துவர்கள் அளித்து வரும் பராமரிப்பு உள்ளிட்ட விவரங்களை குடும்பத்தினரிடமும், மருத்துவர்களிடமும் கனிமொழி கருணாநிதி விசாரித்து விரைவில் நலம்பெற வாழ்த்தினார்.
இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஓட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் திமுக ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமாரை எம்பி கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை பாதிப்புகள்: குறிஞ்சி நகர் – ஹவுசிங் போர்டு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026