ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திருச்செந்தூரில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மடத்தில் வைத்து ஆறுமுகநேரி முதல் அய்யனார்புரம் வரை உள்ள 28 தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராம ஊர் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மற்றும் பெரியோர்கள், ஆலோசகர்கள், இளைஞர்கள், அனைவரும் ஒன்று கூடி 28 கிராமத்திற்கும் சொந்தமான சமுதாய மடத்தை நிர்வாகம் செய்வதற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள்.
தலைவராக கோமஸ்புரம் கிராமத்தைச் சார்ந்த அம்பாசங்கர், துணை தலைவராக முத்தையாபுரம் தெற்கு தெருவை சார்ந்த மா. மாரிசெல்வம், செயலாளராக கீழ அழகாபுரி கிராமத்தைச் சார்ந்த தேவேந்திரன், துணை செயலாளராக மேல அழகாபுரியை சேர்ந்த ஸ்டாலின், பொருளாளராக கீழ அலங்கார தட்டு ஊரைச் சார்ந்த ஜான், ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்வு செய்யப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளுக்கு 28 கிராமத்தைச் சார்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என உறுதி அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து செல்வம் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் மடத்தின் முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மடத்தை நிர்வகிக்க புதிய நிர்வாகிகள் தேர்வு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவையை கனிமொழி கருணாநிதி எம்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் மின்சாரம் இன்றி 2 நாட்களாக பொதுமக்கள் அவதி - விரைந்து நடவடிக்கை எடுக்க கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026