தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவைப்பார் மற்றும் கலைஞானபுரம் கிராமங்களில் முக்கியமான இரண்டு புதிய அபிவிருத்தித் திட்டங்களின் பணிகள் தொடங்கின. விளாத்திகுளம் MLA மற்றும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் G.V. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி இத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
கீழவைப்பார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் ரூ.43.62 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.
அதேபோல், வைப்பார் ஊராட்சி கலைஞானபுரம் கிராமத்தில் MGNREGA திட்டத்தின் கீழ் ரூ.17.10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டும் பணியும் துவங்கப்பட்டது.
நிகழ்வுகளில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இமானுவேல், அன்புராஜன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சிமுனியசாமி, மீனவர் அணி துணை அமைப்பாளர் மதவடியான், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள், ராமர் கிளை செயலாளர்கள் சூசை பூபாலராயர், ரீகன், வில்லியம், சரவணன், சந்திரசேகரன், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சன்னாசி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, மாணவர் அணி முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு இரண்டு கிராமங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்களை வரவேற்றனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் புதிய குடிநீர் திட்டமும் அங்கன்வாடி மையமும் – G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் காயம் அடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
அடுத்த
ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த விழிப்புணர்வு பேரணி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026