தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகில் உள்ள மாநகராட்சி மாநாட்டு மையம் வளாக அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மணிமேகலை விருது மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு துணை முதல்வர் தொடங்கி வைத்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள் மற்றும் வங்கி கடன் இணைப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்கள்.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மல்லிகா, மற்றும் அரசு அதிகாரிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் கவுன்சிலர்கள், திமுக கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சுய உதவிக் குழுவிற்கு விருது மற்றும் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா - காணொளி காட்சி மூலம் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குளத்துள்வாய்ப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் எட்டையபுரம் காவல் நிலையம் எஸ்.ஐ. மாதவராஜன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டல் விடுவதாக கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்!!
அடுத்த
தூத்துக்குடியில் ரூ 120.53 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் பகுதி சார்ந்த வளர்ச்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் துணை முதல்வர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026