நாடார் மக்கள் கூட்டமைப்பு ஏ.சி. துரை இன்று காலை திருச்சி சிவா எம்பி மற்றும் முள்ளக்காடு பகுதியை சார்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த மனுவில் தெரிவித்ததாவது கடந்த (16.7.2025) அன்று நமது தேசியத் தலைவர் கல்விக் கடவுள் ஐயா கு. காமராஜர் எளிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா எம்பி என்பவர் பேசியுள்ளார்.
மேலும் இதனைத் தொடர்ந்து பல்வேறு காணொளி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் இந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு நகர் மன்ற தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார் நாடார் இன மக்கள் ஜாதி வெறி பிடித்த நாய்கள் என்றும் இந்த சம்பவத்தைப் பற்றி பேசுபவர்கள் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் 3 நிமிட காணொளி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நாடார் மக்களிடையே பெருந்தலைவர்க்கு காமராஜர் அவர்களின் புகழை கெடுக்கும்படியும் மிகுந்த பதிவு உள்ளாக்கி வருகிறது. ஆகையால் பெரும் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவின் போது சமத்துவ மக்கள் கழகம் மாலை சூடி அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் கழகம் எஸ். மாரியப்பன், தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர், சாஸ்தா, வீரமுருகன், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், மற்றும் கார்த்திசன், காமராஜர் நற்பணி இயக்கம் கிருஷ்ணராஜபுரம் அசோக், பாலா, பனைக்காட்டு படை கட்சி ஹரிராம், உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் காமராஜர் குறித்தும் நாடார் இன மக்கள் குறித்தும் இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடத்தில் நாடார் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகரின் பனிமய மாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு பெருவிழாவானது ஜூலை 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - பங்குதந்தை ஸ்டார்வின் பேட்டி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026