தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பெருந்திரளாக திரண்டு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் நிறுவனரும், சமூக ஆர்வலருமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரது கண்டன அறிக்கையில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆலைக்கு சீல் வைத்த பிறகும் அரசுக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பல லட்சம் ரூபாய்களை கையூட்டாக பெற்றுக் கொண்டு ஆலை திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஆலையின் ஆதரவாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு இருக்கின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்களின் இந்த செயல் நீதிமன்றங்களின் உத்தரவுகளை அவமதிப்பு செய்வது. இதில் சில வழக்கறிஞர்களும் ஈடுபடுவது மிகவும் அபத்தமான செயல், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவது உச்சநீதிமன்றத்திற்கு எதிரான செயலாக உள்ளது.
உடனே தமிழக அரசு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு இன்று ஆலைக்கு ஆதரவாக சட்ட விரோதமாக திரண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். தூத்துக்குடி சமூக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக ஆதரவாளர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையானது ஆதரவாளர்களை தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஆலை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் நிறுவனரும், சமூக ஆர்வலருமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதோடு ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
அடுத்த
பெருந்தலைவர் காமராஜர் குறித்தும் நாடார் இன மக்கள் குறித்தும் இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடத்தில் நாடார் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026