தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாசரேத் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஐஜினஸ் அந்தோணி குமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், ஏரல் தாலுகா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை இல்லாததால் மக்கள் அவசர சிகிச்சை கிடைக்காமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளி வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை உடனடியாக அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 28 ஆயிரம் மக்கள் வசித்து வருவதால் இது அவசியம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேலும், பிடானேரி சிப்காட் வளாகத்தில் அரசு சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் சில சிறிய தொழில் கூடங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், முன்னர் தமிழக அரசு விரைவு பேருந்து கழகத்தின் கீழ் இயங்கிய குட்டம் – இடையன்குடி – திசையன்விளை – சாத்தான்குளம் – நாசரேத் – திருநெல்வேலி வழியாக சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர் சென்ற பஸ்கள் மற்றும் உடன்குடி – மெஞ்ஞானபுரம் – நாசரேத் – திருநெல்வேலி வழியாக பெங்களூர், சென்னை, கோவை சென்ற பஸ்கள் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. அவை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் தாமஸ், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பிரதிநிதி வீரமணி, தொழில் சங்க துணை தலைவர் ராஜ்குமார், வழக்கறிஞர் சரவணன், நகர தொழிற்சங்க தலைவர் சகாயம், நகர தொழில்நுட்ப பிரிவு அந்தோணி ராஜ், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் ஆபிரகாம், இளைஞர் அணி பிரதாப் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஏரல் பகுதியில் அரசு மருத்துவமனை, தொழிற்சாலை, அரசு பேருந்து சேவை கோரி ஆட்சியரிடம் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தையாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை கோரி புரட்சி பாரதம் கட்சியினர் மனு!!
அடுத்த
தூத்துக்குடியில் மாணவிகள் முன்னெடுத்த கடற்கரை சுத்தம் – சமூக மேம்பாட்டு திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026