தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதிக்கு உட்பட்ட 4டி ஹவுசிங் போர்டு பகுதியில் உருவாகி வரும் பிங்க் பார்க் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, சுப்புலெட்சுமி ஆகியோர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்படும் இந்த பிங்க் பார்க்கில்
குளிர்சாதன வசதியுடன் இன்டோர் ஜிம்
அவுட்டோர் ஜிம்
ஓபன் ஏர் தியேட்டர் (OAT)
வாக்கிங் டிராக்
பேட்மிண்டன் தளம்
பாஸ்கெட் பால் தளம்
உட்பட பல சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் யோகா பயிற்சி செய்யும் வசதிகளும் தனிச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பிங்க் பார்க் முழுக்க முழுக்க பெண்கள் பயன் பெறும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணிகளை விரைந்து முடித்து இந்த மாத இறுதிக்குள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதோடு பார்க்கிற்கு எதிரில் தேங்கியிருந்த மழைநீரை ஆய்வு செய்து, அதை துரிதமாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
பெண்கள் நலன் கருதி உருவாகும் பிங்க் பார்க்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் விரைவான தீர்வு நடவடிக்கைகள்!
அடுத்த
மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழக தொழிலாளர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டுகோள் – பாராளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026