பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2.05 கி.மீ நீளமுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்கு தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தூத்துக்குடியில் இன்று (6.04.2025) ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றத்திலிருந்து தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய வக்பு வாரிய சட்டங்களை திரும்ப பெற கோரியும், இந்தி திணிப்பு, கட்டாய முன்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தேவையான பேரிட நிவாரண நிதி ஒதுக்காதது, பள்ளிக் கல்விக்காக முக்கிய நிதியை வழங்காமல் இருப்பது கிராமப்புற ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்காதது,
மாநிலத் திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரில் இருப்பதால் இத்திட்டத்தை முடக்கி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூபாய் 4034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிற வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும்,
ஏப்ரல் 6-ம் தேதியான இன்று தமிழ்நாட்டிற்கு வருகைத் தரும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை கண்டித்து ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஆகியோர் முன்னிலையில் வி.வி.டி.சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்கள், அனைத்து துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் ,கிராம கமிட்டி தலைவர்கள் வார்டு தலைவர்கள் என ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருகை - எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இருந்து புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் - மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026