திமுக அமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், கருணாநிதி, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக்கழக பிரதிநிதிகளான மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி, மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் ஆகியோர், கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கழக அமைப்பு சீரமைப்பு பணிகள் குறித்து விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியங்கள், பகுதிகள், நகரங்கள் மற்றும் பேரூர் கழகங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதற்கு செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், அன்புராஜ், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ஜெயகண்ணன், இம்மானுவேல், நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், வழக்கறிஞர் குபேர் இளம்பரிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ரவி, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பாஸ்கர், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.